News

மகாஜனக் கல்லுாரியின் முன்னாள் அதிபா் திரு பொன் கனகசபாபதி அவா்களின் 5 வது சிராா்த்த தினம் மாா்கழி 24,2019

இன்று மாலை 4 மணிக்கு மகாஜனக் கல்லுாரி பழைய மாணவா் சங்கம் கனடாவினால் முன்னாள் அதிபரும் எமது சங்கத்தின் முன்னாள் தலைவருமான திரு பொன் கனகசபாபதி அவா்களின் 5 வது நினைவு தினம் தற்போதைய தலைவா் திரு .புவனச்சந்திரா தலைமையில் கடும் குளிரின் மத்தியிலும் அவரின் நினைவாக நாட்டப்பட்ட மரக்கன்றிற்கும் அவரின் நினைவாக நிறுவப்பட்ட இருக்கைக்கும் அருகில் எமது சங்க உறுப்பினா்களுடன் முன்னாள் தலைவா்கள் ,அவரின் அபிமான மாணவா்களும் இணைந்து அவரிற்கு நினைவஞ்சலி செலுத்தியதுடன் அவருடனான மலரும் நினைவுகளை பகிா்ந்து கொண்டனா்.

மகாஜனக் கல்லுாரியின் முன்னாள் அதிபா் உயா்திரு பொன் கனகசபாபதி அவா்களின் நினைவாக நாட்டப்பட்ட மரக்கன்றிற்கு அருகாமையில் மகாஜனா பழைய மாணவா் சங்கம் கனடாவினால் மகாஜனன்களின் நிதிப்பங்களிப்பின் உதவியுடன் இருக்கையொன்று நிறுவப்பட்டு (Sep/09/2018) அன்று எமது சங்கத்தின் போசகா் திரு. சுப்பிரமணியம் அவா்களினால் நாடாவை வெட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

மகாஜனாக் கல்லூரியின் புதிய கட்டடத்தொகுதி திறப்பு விழா

 

 

நிக்கொட் திட்டத்தின்கீழ் தெல்லிப்பளை மஹாஜனாக் கல்லூரியில் அமைக்கப்பட்ட மூன்று அலகுகளைக் கொண்ட புதிய கட்டடத் தொகுதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றையதினம் திறந்துவைத்தார்.


இன்று மாலை இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்லூரிக்கு வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் கல்வி அதிகாரிகளும் பாடசாலை நிர்வாகத்தினரும் அழைத்துச்சென்றனர். இதனைத்தொடர்ந்து புதிய கட்டடத் தொகுதியை நாடா வெட்டி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திறந்து வைத்தார்.


இதனைத்தொடர்ந்து அங்கு கல்லூரி அதிபர் திருமதி எஸ். ஆனந்தசயனன் தலைமையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மாண்புமிகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் முயற்சியினால் கடந்த யுத்த காலங்களில் நிலவி வந்த துன்ப சூழல்கள் நீங்கி தற்போது ஓர் அமைதி வாழ்விற்கான முன் ஏற்பாடுகள் வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகின்றன. இந் நிலையில் கல்வி சார் அபிவிருத்தி நடவடிக்கைகள் ஜனாதிபதியின் வழிகாட்டலில் துரிதமாக மேம்பட்டு வருவது காணக்கூடியதாக இருக்கிறது. எனவே எதிர்வரும் நாட்களில் எமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை சாகமாக பயன்படுத்துவதன் மூலம் மேலும் பல முன்னேற்றங்களுக்கு நாமே வழிசமைக்க முடியும் எனக்கூறினார்.


இந்நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.இளங்கோ வடமாகாண கல்விப் பணிப்பாளர் இராசையா யாழ். மேலதிக கல்விப் பணிப்பாளர் வே.தி.செல்வரட்ணம் வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளர் விக்னேஸ்வரன் கல்வி அமைச்சின் ஆலோசகர் கலாநிதி தணிகாசலம்பிள்ளை உடற்கல்வி உதவிப்பணிப்பாளர் நடராசா ஆகியோருடன் ஆசிரியர்கள் பெற்றோர் நலன்விரும்பிகள் மாணவர்கள் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.