மகாஜனாக் கல்லூரியின் தாபகர் அமரர் பாவலர் துரையப்பா பிள்ளையினதும், அவர் வழிவந்த நவ மகாஜன சிற்பி அதிபர் அமரர் தெ.து. ஜெயரத்தினம் அவர்களினதும்
சிந்தனையில் முக்கிய இடம் பெற்ற மாணவர் கல்வியை,
கனடாவில் வாழ்கின்ற இளைய தலைமுறையினருக்கும் சென்றடைய வேண்டும் என்ற சீரிய நோக்கத்தில் கணித, பொது அறிவுப் போட்டிகளை நடத்தி, இத் தலைமுறையினரை ஊக்குவித்து வருகிறது மகாஜனா பழைய மாணவர் சங்கம், கனடா.
பல்லோரது பாராட்டுக்களையும் பெற்றதுமான எமது பழைய மாணவர் சங்கம்
சாதரணமாக பாடசாலைகளில்
நடைபெறும் பரீட்சைகளைப் போன்று அல்லாது, மாணவர்களின் புத்திக்கூர்மையை
பரிசோதிக்கும் போட்டிப்
பரீட்சையாக கடந்த 17 வருடங்களாக நாம் இப் போட்டிகளை நடத்தி வருகின்றோம்.
நன்றி.
மகாஜனா பழையமாணவர் சங்கம் கனடா.
The award ceremony date will be revealed soon. We appreciate your patience!